தொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..!

Published : Nov 01, 2019, 10:51 AM IST
தொடர் சரிவில் பெட்ரோல் மற்றும் டீசல் ரேட்..!

சுருக்கம்

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மீண்டும் குறைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை மாற்றப்பட்டு வந்தது. அந்த நடைமுறை பின்னர் மாற்றப்பட்டு தினமும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 6 மணி முதல் புதிய விலை அமல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று 3 காசுகள் குறைந்து 75.69 ரூபாயாக இருக்கிறது. அதே போல ஒரு லிட்டர் டீசல் விலை 3 காசுகள் குறைந்து 69.52 ரூபாயாக விற்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக விலை அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

Deep Sleep Mode-க்கு சென்ற CM Vijay – உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்
Chennai Parandur Airport : பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்து! ரூ.50,000 கோடி இழப்பா? விஜய் அரசின் அடுத்த பிளான் என்ன?