திடீர் விலை இறக்கத்தால் நிம்மதி அடைந்த வாகன ஓட்டிகள்..!

By Manikandan S R SFirst Published Oct 3, 2019, 10:29 AM IST
Highlights

பலநாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாதம் இருமுறை நிணயிக்கப்பட்டு வந்தது. அந்த நடைமுறை மாற்றப்பட்டு தினமும் புதிய விலை அமல்படுத்தும் முறை கடந்த அறிமுகப்படுத்தப்பட்டு வந்தது. தினமும் காலை 6 முதல் புதிய விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் -0.10 காசுகள் குறைந்து 77.40 ரூபாயாக உள்ளது . அதே போல ஒரு லிட்டர் டீசல் -0.06 காசுகள் குறைந்து 71.24 ரூபாயாக இருக்கிறது.

சவுதி அரேபியாவில் இருக்கும் எண்ணெய் ஆலைகள் தாக்கப்பட்டதை தொடர்ந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை அதிகரித்தது. இதனால் கடந்த சில நாட்களாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் அதிரடியாக உயர்த்தப்பட்டு வந்தது. தினமும் 20 காசுகளுக்கு மேலாக விலை அதிகரித்தது.

இந்த நிலையில் பல நாட்களுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று சில காசுகள் குறைக்கப்பட்டுள்ளன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

click me!