#BREAKING அரை நிர்வாணத்துடன் பாலியல் உணர்வு தூண்டல்.. பத்ம சேஷாத்ரி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

Published : May 25, 2021, 10:51 AM IST
#BREAKING அரை நிர்வாணத்துடன் பாலியல் உணர்வு தூண்டல்.. பத்ம சேஷாத்ரி ஆசிரியருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்!

சுருக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜூன் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனுக்கு ஜூன் 8ம் தேதி வரை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்திரி என்ற பெயரில் பிரபல தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடந்து வருகிறது. ஆசிரியர்களும் தங்களது வீடுகளில் இருந்தே அவரவர் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல், ஒவ்வொரு வகுப்பு ஆசிரியர்கள் தலைமையில் வாட்ஸ் அப் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வகையில் கணக்கு பதிவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன் தனது வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தி வந்தார். அப்படி ஆன்லைன் வகுப்பின் போது ஆசிரியர் ராஜகோபாலன் துண்டு மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணத்துடன் வகுப்புகள் நடத்துவதும், மாணவர்கள் ஆன்லையில் இருக்கும் போது, குளியல் அறையில் இருந்து வருவது என மாணவிகளுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், ஆன்லைன் வகுப்புக்கு பிறகு, பாடம் தொடர்பான சந்தேகங்களை மாணவன், மாணவிகள்  வாட்ஸ் அப் குழு மூலம் சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் கேட்டு வருகின்றனர். அப்படி பாடம் தொடர்பான சந்தேகங்களை ஆசிரியர் ராஜகோபாலனிடம் கேட்டு வாட்ஸ் அப் குழுவில் வரும் மாணவிகளுக்கு, இரவு நேரத்தில் பாடம் தொடர்பான சந்தேகங்கள் கூறுவது போல் வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள மாணவிகளின் செல்போன் எண்களை எடுத்து அவரது தனிப்பட்ட விவரங்களை கேட்டு தெரிந்து கொள்வார். பிறகு சம்பந்தப்பட்ட மாணவிகளிடம் இரவு நேரங்களில் தொடர்பு கொண்டு, அவர் உடுத்தி இருக்கும் துணிகள் குறித்தும், உடல் ரீதியான ஆபாச பதிவுகள் செய்து வந்துள்ளார். 

இதுபோல் தொடர்ந்து பல மாணவிகளுக்கு அவர் வாட்ஸ் அப் மெசேஜ் மற்றும் வாட்ஸ்அப் காலில் தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், நாளுக்கு நாள்  ராஜகோபாலின் லீலைகள் எல்லை மீறியது. இதனால் மாணவிகள் சில டுவிட்டர் பக்கத்தில் ஆன்லைன் வகுப்பின் போது அரை நிர்வாணமாக பாடம் எடுக்கும் ஆசிரியர் என ராஜகோபாலன் புகைப்படத்துடன் பதிவு செய்தனர். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதனையடுத்து, ராஜகோபாலன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் அவரை கைது செய்தனர். இந்நிலையில், பாலியல் புகாரில் கைதான ஆசிரியர் ராஜகோபாலனை வரும் ஜூன் 8ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் ஆசிரியர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

Chennai Power Cut : சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை! லிஸ்டில் உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Cut : சென்னையில் நாளை மின்தடை: எந்தெந்த பகுதிகளில் பாதிப்பு? - முழு விவரம்