பைக் ஸ்டாண்டில் ரொம்ப நாளா உங்க வாகனம் நிற்கிறதா ?? அப்ப உங்களுக்கு தான் இந்த "ஆப்ரேஷன் நம்பர் பிளேட்" ..

Published : Aug 16, 2019, 03:17 PM ISTUpdated : Aug 16, 2019, 03:21 PM IST
பைக் ஸ்டாண்டில் ரொம்ப நாளா உங்க வாகனம் நிற்கிறதா  ?? அப்ப உங்களுக்கு தான் இந்த "ஆப்ரேஷன் நம்பர் பிளேட்" ..

சுருக்கம்

ரயில் நிலையங்களில் ரொம்ப நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை ரயில்வே போலீசார் "ஆப்ரேஷன் நம்பர் பிளேட்" .. என்ற பெயரில் பறிமுதல் செய்துள்ளனர் .

சுதந்திர தினத்தை முன்னிட்டு தெற்கு ரயில்வே ரயில் நிலையங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்வே போலீசார் புதிய திட்டத்தை கையில் எடுத்தனர் . அதற்கு  "ஆப்ரேஷன் நம்பர் பிளேட்" 
என பெயரிடப்பட்டது .

இந்த திட்டத்தின் படி தமிழகம் முழுவதும் ரயில் நிலையங்களில் இருக்கும் வாகன நிறுத்துமிடத்தில் பல நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்கள் , ரயில்நிலையங்களை சுற்றி சந்தேகம் கொள்ளும்படியாக இருக்கும் வாகனங்களை  பறிமுதல் செய்ய முடிவெடுத்தனர் . 

அதன்படி சென்னையை சுற்றி 250 வாகனங்களும் , தமிழகம் முழுவதும் தெற்கு ரயில்வே கட்டுப்பாட்டில்  உள்ள 16 மண்டலங்களிலும் சேர்த்து மொத்தம் 866  இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது .

இந்த வாகனங்கள் அனைத்தும் அதன் என்ஜின் நம்பரை கொண்டு யாருடைய வாகனம் ?? ,என்ன காரணத்திற்காக நீண்ட நாட்களாக எடுக்கப்படாமல் இருக்கிறது என விசாரணை நடத்தப்பட உள்ளதாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர் ..

PREV
click me!

Recommended Stories

சென்னையில் 8 மாடிகள் கொண்ட BSNL அலுவலகத்தில் தீ விபத்து! அலறி அடித்து ஓடிய ஊழியர்கள்.! நடந்தது என்ன?
தூய்மை பணியாளர்களுக்கு இனி கவலையே இல்ல.. 200 வார்டிலும் வருது சூப்பர் ஓய்வறைகள்!