பொதுமக்களுக்கு குட்நியூஸ்.. 174 நாட்களுக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம்..!

By vinoth kumarFirst Published Oct 15, 2020, 10:45 AM IST
Highlights

தமிழகத்தில் 174 நாட்களுக்கு பிறகு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

தமிழகத்தில் 174 நாட்களுக்கு பிறகு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். 

பொது முடக்கத்திற்குப் பின் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து, பேருந்துகள் சேவைக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், குறைந்த எண்ணிக்கைகளுடன், அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தனியார் பேருந்துகளும், ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை. பேருந்துகளில் 100 சதவிகிதம் பயணிகளை ஏற்ற அனுமதிக்க வேண்டும். பேருந்துகள் ஓடாத மாதங்களில் செலுத்த வேண்டிய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். இன்சூரன்சை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், 174 நாட்களுக்கு பிறகு நாளை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் விதிமுறைகளைப் பின்பற்றி, முதற்கட்டமாக 500 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் என்றும் பயணிகளின் வருகையைப் பொருத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!