கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தில் ஆட்சேபனை… - மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

By Asianet TamilFirst Published Jul 27, 2019, 1:13 AM IST
Highlights

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் கல்லணை கால்வாய்க்கு கொண்டு வருவதற்கு பதில் மாயனூர் கட்டளை கதவணையில் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் அறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் கல்லணை கால்வாய்க்கு கொண்டு வருவதற்கு பதில் மாயனூர் கட்டளை கதவணையில் கொண்டு வர வேண்டும் என்று மத்திய அரசின் அறிக்கைக்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விரைவில் கடிதம் எழுத முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோதாவரி ஆற்றில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 1,100 டிஎம்சி வரை வங்கக்கடலில் கலந்து வீணாகிறது. இவ்வாறு கடலில் கலக்கும் நீரை திருப்பி விட்டு பாசனம், குடிநீர் மற்றும் ெதாழிற்சாலை பயன்பாடு போன்ற பல்வேறு தேவைகளுக்கு உபயோகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கோதாவரி-காவிரி-கிருஷ்ணா, பெண்ணாறு-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு வரை நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இதை தொடர்ந்து, இதற்கான திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியில் தேசிய நீர் மேம்பாட்டு முகமை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் கோதாவரியில் ஜன்னல்பேட் அல்லது அகிலபள்ளி அருகே கதவணை அமைக்கப்படுகிறது. அங்கிருந்து நாகர்ஜூனா சாகர் அணைக்கு எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சோமசீலா அணைக்கு கொண்டு வருப்படுகிறது. அங்கிருந்து கிருஷ்ணா கால்வாய் வழியாக பாலாறு கொண்டுவரப்பட்டு காவிரியில் இறுதியாக கல்லணை கால்வாயில் இணைக்கும் வகையில் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின்படி, பைப்லைன் மூலமாக கொண்டு செல்வது தொடர்பாக ஒரு அறிக்ைகயும், மற்றொரு அறிக்கை கால்வாய் அமைத்து கொண்டு வருவது தொடர்பாக ஒரு அறிக்கையும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கைக்கு கருத்து கேட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் சமீபத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இந்த கூட்டத்தில், கல்லணைக்கு கொண்டு வரும் பட்சத்தில் டெல்டா பகுதிகளுக்கு மட்டுமே தண்ணீர் தர முடியும். அதே நேரத்தில் மாயனூர் கட்டளை கதவணை அருகே கொண்டு சேர்க்கும் பட்சத்தில் வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுவது எளிதாக இருக்கும்.

அதேபோன்று, தமிழகத்திற்கு 125 டிஎம்சி நீர் கொண்டு வரப்போவதாக மத்திய அரசு கூறியுள்ளது. இந்த திட்டத்தை பைப் ைலன் மூலம் செயல்படுத்தினால் கூடுதல் செலவு ஏற்படும். மேலும், பைப் லைன் மூலம் அதிக நீரை கொண்டு வர முடியாது. எனவே, கால்வாய் தோண்டி தண்ணீர் கொண்டு வரலாம் என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

click me!