தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த வாய்ப்பு இல்லை.. மருத்துவக்கு குழு.. ஜூன் மாதத்தில் பொது போக்குவரத்து.?

By vinoth kumarFirst Published Apr 30, 2020, 6:02 PM IST
Highlights

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை; படிப்படியாகதான் தளர்த்த முடியும் என மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை; படிப்படியாகதான் தளர்த்த முடியும் என மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. இந்நிலையில், வருகிற மே 3ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தடுப்புப் பணிக்காக உருவாக்கப்பட்ட 19 மருத்துவ நிபுணர் குழுவுடன் கொரோனா பரவல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.  இதில், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர். 

இதனையடுத்து, ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீபாகவுர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் ஊரடங்கை படிப்படியாக விலக்கலாம். ஆனால், சமூக இடைவெளி முக்கியம்.  கொரோனா வைரஸ் நீண்டநாள் நம்முடன் இருக்க உள்ளது. கூட்டம் கூடுவதை அனுமதிக்க கூடாது. ஒரே நேரத்தில் தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்த முடியாது. பாதிப்பில்லா சில மாவட்டங்கள் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை தளர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். 

சில இடங்களில் ஊரடங்கை தளர்த்தினாலும் தனிமனித இடைவெளிகட்டாயம் தேவை. மேலும், நமது வாழ்வியல் முறையை அவசியம் மாற்ற வேண்டும் என்பதை கொரோனா வைரஸ் உணர்த்தியுள்ளது. கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள, தனிமனித இடைவெளி அவசியம். முகக் கவசம் அணிவது, கைகளை அவ்வப்போது கழுவுவது போன்றவற்றை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். பரிசோதனையை அதிகரித்தால் நாம் அதிகளவில் கொரோனா பாதித்தவர்களைக் கண்டறிய முடியும்.  கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் பிரதீபாகவுர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் படிப்படியாக தளர்வுகள் இருந்தாலும், தமிழகத்தில் பொது போக்குவரத்தை கொண்டு வருவதற்கு  நிச்சயம் ஜூன் மாதத்திற்கு மேல் ஆவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!