அடுத்த 24 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு .!! ஆக்டோபர் 20 முதல் வடகிழக்கு பருவமழை ஆரம்பம்...!!

By Ezhilarasan BabuFirst Published Oct 12, 2019, 1:30 PM IST
Highlights

24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது,  இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இயக்ககம்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பச் சலனம் காரணமாக தெற்கு மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வரும் 20 ஆம் தேதி முதல் ஆரம்பிக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது,  இது குறித்து தகவல் தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் இயக்ககம்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம்,தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில இடங்களில் மாலை நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகும்கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 7 சென்டி மீட்டர் மழையும், நீலகரி மாவட்டம் உதகமண்டலம், அவலாஞ்சி உள்ளிட்ட இடங்களில் 6 சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. என தெரிவித்துள்ளது.

click me!