48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..!

By vinoth kumarFirst Published Nov 27, 2020, 1:11 PM IST
Highlights

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 
 

வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி உருவான பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக பகுதியை நோக்கி வரும். புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர்1ம் தேதி முதல் 3ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வங்கக்கடலில் நிவர் புயல் உருவாகி கரையை கடந்த நிலையில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

click me!