உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்..!

Published : Aug 04, 2020, 11:09 AM IST
உருவானது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி... எச்சரிக்கும் இந்திய வானிலை மையம்..!

சுருக்கம்

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- வடக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று புதிதாக உருவாகி உள்ளது. இதன் காரணமாக தென் மேற்கு பருவமழை மேலும் தீவிரமடைய உள்ளது. கோவா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும், கர்நாடகா, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக் கூடும். ஆந்திரா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தைப் பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும். 

தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், தென் கிழக்கு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், கடலோர பகுதி, அந்தமான் நிக்கோபார் கடலோர பகுதிகளுக்கு அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம்  அறிவுறுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ரூ.18,500 முதல் 58,600 வரை சம்பளம்.. விண்ணப்பிப்பது எப்படி? சென்னை தியாகராஜர் கோவிலில் வேலை!
தங்கத்துடன் போட்டி போடும் வெள்ளி.! இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ லேட்டஸ்ட் அப்டேட்!