நாளை ஒருநாள் மட்டும்... மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு...!

By Kanimozhi PannerselvamFirst Published May 8, 2021, 4:40 PM IST
Highlights

தற்போது அந்த வரிசையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் 26 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு வாரத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக இரு வாரங்களுக்கு மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான மளிகை, காய்கறி, பாலகங்கள், மருந்தகங்கள், விவசாயம் சார்ந்த கடைகள் போன்றவை மதியம் 12 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

திங்கட்கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் திறந்திருக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முழு ஊரடங்கிற்காக மக்களும், நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளையும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இன்றும், நாளையும் மாநகராட்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்கலாம் என்றும், இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. முழு ஊரடங்கின் போது டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி இல்லை என்பதால் இன்றும், நாளையும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகளை திறந்து வைத்திருக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.  

தற்போது அந்த வரிசையில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் இருந்து பலரும் சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதி வருகிறது. சென்னையில் இருந்து மற்ற பகுதிகளுக்கு பேருந்து நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ரயில் நிலையத்துக்கும் செல்வதற்கு வசதியாக நாளை சிறப்பு மெட்ரோ ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  இதனை அடுத்து நாளை மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல் செயல்படும் என்றும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை பத்து நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

click me!