7.5 % ஒதுக்கீடு மூலம் டாக்டராக போகும் அரசுப்பள்ளி மாணவர்கள்…! அமைச்சர் அறிவிப்பு

By manimegalai aFirst Published Nov 24, 2021, 6:42 PM IST
Highlights

நடப்பு கல்வியாண்டியில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் கிராமப்புற மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீட்டில் கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்

இன்று அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2 கோடியே 16 லட்சம் மதிப்பில் நிமிடத்திற்கு 1000 லிட்டர் ஆக்ஸிஜனை உற்பத்தி செய்திடும் ஆக்ஸிஜன் ஜெனரேட்டர் துவக்க விழாவில் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நடப்பாண்டு 1500 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது என்பது இந்தியாவில் இதுவரை நடைபெறாதது. முதலமைச்சர் மத்திய அரசிற்கு குறிப்பாக பிரதமர், அமைச்சர்களுக்கு தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் விளைவாலும், தாங்கள் மத்திய அரசின் சுகாதார துறை அமைச்சரையும், அலுவலர்களையும் சந்தித்து வலியுறுத்தியதாலும் இந்த நிலையை எட்டப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும் கிராமப்புற மாணவர்களுக்கு வழங்கும் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை என்பது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர் என கூறினார். நவம்பர் மாத இறுதிக்குள் முதல் தவணைத் தடுப்பூசி செலுத்துவதில் 100 சதவிகிதம் என்ற இலக்கை எட்டும் வகையில் பணியாற்றி வருகிறோம். மேலும், தமிழ்நாட்டில் முதல்தவணை தடுப்பூசி 76 சதவிகிதத்தினரும், இரண்டாவது தவணை தடுப்பூசி 40 சதவிகிதத்தினரும் போட்டுள்ளனர். இன்னும் கிராமங்களுக்குச் சென்று வீடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் நேற்று ஒரே நாளில் 3.4 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என கூறினார். இதனையடுத்து,  வாரந்தோறும் இரண்டு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 100 சதவிகிதம் தடுப்பூசியை செலுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார். எனவே தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், இதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். முதலமைச்சரால் தனியார் மருத்துவமனைகளில் தனியார் தொழில் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர். நி பங்களிப்பில் இலவசமாக தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதனால் தனியார் மருத்துவமனைகளில் இதுவரை பெறப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை சுமார் 23 லட்சமாக உள்ளதாகவும்
இதுவரை இலவசமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்திய எண்ணிக்கை சுமார் 27 லட்சத்து 19 ஆயிரத்து 707 ஆக உள்ளதாகவும் கூறினார். மேலும் தடுப்பூசி கையிருப்பு என்பது தனியார் மருத்துவமனைகளில் இல்லை என கூறினார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நான்கு மருத்துவச் சங்கங்களுடான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது ,கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்குவது என்பது முதலமைச்சரின் அனுமதியைப் பெற்று விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். தமிழகத்தில் இதுவரை ரூ.6 கோடியே 71 லட்சம் பேருக்கு கரோனாத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.

click me!