ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு... சிலிண்டர் விலை அதிரடி உயர்வு..!

By vinoth kumarFirst Published Mar 1, 2021, 10:35 AM IST
Highlights

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரித்து ரூ.835க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை சிலிண்டர் விலை உயர்ந்திருப்பது இல்லத்தரசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கேஸ் சிலிண்டர் விலையை மாதத்திற்கு ஒருமுறை எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு நிர்ணயித்து வருகிறது. கொரோனா பரவலின் காரணமாக கச்சா எண்ணெய் விலை பெருமளவு சரிந்தபோது, விலையை குறைத்தனர். ஜூன், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சற்று அதிகரிக்கவும், கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்தன. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. 

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வீடுகளில் பயன்படுத்தும் 14.2 கிலோ எடையுள்ள மானிய சிலிண்டர் விலை கடைசியாக கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ரூ.25 உயர்த்தப்பட்டு ரூ.810-க்கு விற்கப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் சிலிண்டர் விலை மேலும் ரூ.25 அதிகரிக்கப்பட்டு ரூ.835க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் மட்டும் ரூ.100 விலை அதிகரித்த நிலையில் மார்ச்சில் மேலும் ரூ.25 அதிகரித்து விற்பனை செய்யப்படுவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

click me!