சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நகை அளவீடு செய்யும் பணியின்போது, 5 கிலோ தங்க நகை குறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜுவல்லரி கிளை மேலாளர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதன்படி ஜுவல்லரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், 8 ஆண்டுகளாக வேலைபார்த்து வந்த ராஜஸ்தானை சேர்ந்த பிரவின்குமார் சிங் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. பாலீஸ் போடும் நகைகளை பீரோவில் வைக்காமல், அதன் அடியில் வைத்துவிட்டு பின்னர் சக பணியாளர்கள் இல்லாத நேரத்தில் அதனை எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தப்பியோடிய ஊழியர் எங்கு சென்று இருப்பார் என்பது குறித்து தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.