குடிநீர் பிரச்சனைக்கு மோசமான ஆட்சியே காரணம்... முதல்வர் எடப்பாடியை சாடிய கிரண்பேடி..!

By vinoth kumarFirst Published Jun 30, 2019, 6:06 PM IST
Highlights

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று முதல்வர் எடப்பாடி மீது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு மோசமான ஆட்சியே காரணம் என்று முதல்வர் எடப்பாடி மீது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.

 

தமிழகம் முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் பல்வேறு இடங்களில் ஓட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இந்தச் சூழலில் குடிநீர் திட்டப் பணிகளுக்காக கூடுதலாக 200 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். மேலும்  ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 10 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து தண்ணீர் வழங்க 65 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டார். 

இதனிடையே, சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு மோசமான ஆட்சியே காரணம் என புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார். இந்தியாவின் பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவைகளால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டுள்ளது என விமர்சித்துள்ளார். மேலும் மக்களின் சுயநல எண்ணமும், மோசமான அணுகுமுறையும் கூட இந்த பிரச்சனைக்கு காரணம் என்றும் கிரண்பேடி கூறியுள்ளார்.

click me!