ஊர்ஒலகம் காத்திருக்கு உறவாட வா மகனே... ஒரே ஒரு மன்றாட்டு உசுரோட வா மகனே" சுர்ஜித்துக்கு வைரமுத்து கவிதை...!!

Published : Oct 28, 2019, 06:06 PM IST
ஊர்ஒலகம் காத்திருக்கு  உறவாட வா மகனே...   ஒரே ஒரு மன்றாட்டு  உசுரோட வா மகனே"    சுர்ஜித்துக்கு வைரமுத்து கவிதை...!!

சுருக்கம்

தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் அவனை மீட்க சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிறுவனுக்காக நெஞ்சை உருக்கும் கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அது:-   

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் வீட்டு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தார் இரண்டு வயது சிறுவன் சுர்ஜித் ஆள்துளை கிணற்றில் விழுந்தான்,  கடந்த 25-10-2019 அன்று மாலை 5:30 மணிக்கு விழுந்த சுர்ஜித் தற்போது 88 அடி ஆழத்தில் சிக்கியுள்ளான் அவனை மீட்க சுமார் 70 மணி நேரத்துக்கும் மேலாக மீட்புக்குழுவினர் போராடி வருகின்றனர். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து சிறுவனுக்காக நெஞ்சை உருக்கும் கவிதை ஒன்றை எழுதி உள்ளார் அது:- 

சோளக் கொல்லையில
 சொல்லாமப் போனவனே 
மீளவழி இல்லாம 
நீளவழி போனவனே. 

கருக்குழியிலிருந்து
 கண்தொறந்து வந்ததுபோல் 
எருக்குழியிலிருந்து
 எந்திரிச்சு வந்திரப்பா

 ஊர்ஒலகம் காத்திருக்கு
 உறவாட வா மகனே 
ஒரே ஒரு மன்றாட்டு
 உசுரோட வா மகனே"

 என , குழந்தை சுஜித் மீண்டு வர வைரமுத்து இவ்வாறு கவிதை எழுதிள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!