தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நகரப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெற்றப்பட்டது. ஆகையால், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள், தங்களின் நகைகளை பெற்றுக்கொண்டு வருவதாக என தகவல் வெளியாகியுள்ளது.
நகர்ப்புற தேர்தல் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதால், நகர்ப்புறங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள் நகைகளை பெற்றுக் கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்தால் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள பயிர்க் கடன்கள் மற்றும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது. மேலும், விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கான அதிகாரபூர்வ அரசாணையும் தமிழக அரசால் பின்னர் வெளியிடப்பட்டது. அதனடிப்படையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், `நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக ஒரு மாத காலம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக்கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண், முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களைச் சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யப்பட்டது எனத் தெரிவித்தார்.
மேலும், அவ்வாறு புள்ளிவிவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் நகைக்கடன்கள் வழங்கப்பட்டதிலும் பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பட்டது. இதனையடுத்து இத்திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்ய பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நகைக்கடன் பெற்றிருப்பது, முன்னதாக பயிர்க்கடன் பெற்றவர்கள், வெவ்வேறு வங்கிகளில் 5 சவரனுக்கும் மேல் நகைக்கடன் பெற்றவர்கள் இந்தத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது என அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 13 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடைத்துள்ளது. இதில் 5 சவரனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற 22.52 லட்சம் பேரில், 10.18 லட்சம் பேருக்கு கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக கூட்டுறவு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
undefined
மேலும் நகைக்கடன் பெற்ற தகுதியான மற்றும் தகுதியற்றவர்களின் பட்டியலை தயாரிக்க தமிழக அரசு குழு ஒன்றையும் அமைத்தது. அந்தக் குழுவும் மாவட்டம் வாரியாக நகைக்கடன் பெற தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அந்தந்த கூட்டுறவு வேளாண் சங்கங்களுக்கு அனுப்பும் என தெரிவிக்கப்பட்டது. அந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் இதுவரை, பயனாளிகளின் விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனிடையே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில், நகரப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்ததையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் வாபஸ் பெற்றப்பட்டது. ஆகையால், 5 சவரன் வரை நகை கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகள், தங்களின் நகைகளை பெற்றுக்கொண்டு வருவதாக என தகவல் வெளியாகியுள்ளது.