கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை..! விரைவில் உறுதியான கூட்டணி அமையும்- ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Mar 14, 2024, 3:57 PM IST

ஜாபர் சாதிக்கின் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்வது போல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், தமிழகத்தில் பலரையும் முகத்தையும் மறைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் நாள் விரைவில் வரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
 


விளக்கம் அளிக்காதது ஏன்..?

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாபர் சாதிக்குடனான தொடர்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தி இருந்தார். ஆனால் இதுவரை விளக்கம் அளிக்காமல் அவர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக விமர்சித்தார்.  மடியில் கனம் உள்ளதால் தான் முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளிக்கவில்லை என தெரிவித்தார். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என கூறினார்.

Tap to resize

Latest Videos

கூட்டணியில் இழுபறி இல்லை

ஜாபர் சாதிக்கின் முகம் மூடப்பட்டு அழைத்துச் செல்வது போல், அவருடன் தொடர்பில் இருந்தவர்களும், தமிழகத்தில் பலரையும் முகத்தையும் மறைத்து கைது செய்து அழைத்துச் செல்லும் நாள் விரைவில் வரும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை எனவும், விரைவில் உறுதியான கூட்டணி அமையும் என தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு , கட்சிக்கு தொடர்பில்லாதவர் ஓபிஎஸ். சின்னம் குறித்து அவர் சொல்வதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

தமிழ்நாட்டில் 50 ஆண்டுகளாக திமுக எம்.பி. இல்லாத மக்களவை தொகுதி எது தெரியுமா?

click me!