சிறுமி பலாத்காரம்… - ஐடிஐ மாணவன் கைது

Published : Jun 28, 2019, 12:43 PM IST
சிறுமி பலாத்காரம்… - ஐடிஐ மாணவன் கைது

சுருக்கம்

தஞ்சை மாவட்டம் வல்லத்தில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் சிறுமி, நேற்று வீட்டில் இருந்து பள்ளி சென்றார். பள்ளியில் ஆசிரியை, பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, அந்த மாணவி திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்து சக மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே மாணவியை, ஆசிரியைகள் மீட்டு சிகிச்சைக்காக வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், சிறுமி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினர்.

இதுகுறித்து, வல்லம் அனைத்து மகளிர்  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மாணவியிடம் விசாரித்தனர். அதில், தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியை சேர்ந்த ஐடிஐ மாணவன் மாணவியை பலமுறை பலாத்காரம் செய்தது தெரிந்தது.

இதையடுத்து போலீசார், ஐடிஐ மாணவனை, போக்சோ சட்டத்தின கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

PREV
click me!

Recommended Stories

நேற்று ரூ.800 குறைந்த தங்கம்.. இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? நகை வாங்க இதுதான் சரியான நேரமா?
போட்டி போடும் தக்காளி, வெங்காயம்.. பை பையாக அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்.! ஒரு கிலோ இவ்வளவு தானா.?