இன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..!

Published : Jul 22, 2019, 11:28 AM IST
இன்று முழுவதும் கொட்டித்தீர்க்கப்போகும் மழை... சென்னை மக்களே உஷார்..!

சுருக்கம்

இன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் அலுவலகங்களும், வெளியேவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் வெப்பச் சலனம் காரணமாக, நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் தொடங்கிய தென்மேற்கு பருவமழையும் தமிழக மலைப் பிரதேசங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், கடலோரப் பகுதிகளில் கன மழையை வாரி வழங்கி வருகிறது.

 

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில்,’’பருவமழை காரணமாக சாரல் மழை முதல் கன மழை வரை பெய்து வருகிறது. தென் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழைப்பொழிவு கிடைத்துள்ளது. கடலோரப் பகுதிகளில் அதி தீவிர மழை பெய்துள்ளது. ஊட்டியைப் போன்ற குளிர்ச்சியான சூழலில், சென்னையில் இன்றைய நாள் முழுவதும் நீடிக்கும். இதற்கிடையில் சாரல் முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும். இன்று மாலை, இரவு மற்றும் நாளை காலை வேளைகளில் நல்ல மழை பெய்யும்’’ எனக் கூறியுள்ளார்.

இன்று காலை முதல் சென்னையில் மழை பெய்து வருவதால் மக்கள் அலுவலகங்களும், வெளியேவும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நல்ல மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகள் எங்கும் மழைநீர் தேம்பி உள்ளது.  
 

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!