மத்திய அரசு தளர்வு பொருந்தாது... ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய தமிழக அரசு உத்தரவு..!

By vinoth kumarFirst Published Apr 21, 2020, 6:05 PM IST
Highlights

 ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் தளர்ப்பு பொருந்தாது என தெரிவித்துள்ளது. 

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசு தளர்வு தமிழகத்தில் பொருந்தாது ஆகையால், ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியா உள்ளிட்ட 209 நாடுகளும் மேலாக கொரோனா வைரஸ் பரவி பெரும் அச்சுறுத்தலை  ஏற்படுத்தியுள்ளது. இந்தியளவில் கொரோனாவால்  அதிகம் பாதிக்கபட்ட மாநிலத்தில் தமிழகம் 6-வது இடத்தில் உள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த 14-ம் தேதி வரை 21  நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால் தமிகத்தில் ஏப்ரல் 30ம் தேதி ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்த நிலையில் பிரதமர் மோடி மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். 

ஆனால், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு எந்தந்த தொழில்களில் தளர்வு இருக்கும் என உள்துறை அமைச்சகம் பட்டியலை வெளியிட்டது. இந்நிலையில், இதுதொடர்பாக முடிவெடுக்க முதல்வர் பழனிசாமி குழு ஒன்றை அமைத்தார். அந்த குழுவின் அறிக்கையை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த ஆலோசனை முடிவில் தமிழகத்தில் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3ம் தேதி வரை தொடரும் என முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். ஏற்கனவே அத்தியாவசிய தேவைகளுக்கு வழங்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஐ.டி. ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய வேண்டும். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசின் தளர்ப்பு பொருந்தாது என தெரிவித்துள்ளது. 

click me!