Latest Videos

உயிர் நண்பர்களே ஐடி ஊழியரின் உயிரை எடுத்த பயங்கரம்.. நடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

By vinoth kumarFirst Published Jun 25, 2024, 2:11 PM IST
Highlights

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(52).  கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (26).  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

செங்கல்பட்டு அருகே விக்னேஷ் என்ற ஐடி ஊழியரை அவரது நண்பர்களே கொலை செய்து குழிதோண்டி புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜ்(52).  கேட்டரிங் வேலை செய்து வருகிறார். இவரது மகன் விக்னேஷ் (26).  சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11-ம் தேதி வெளியே சென்ற விக்னேஷ் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களிலும் குடும்பத்தினர் தேடியும் கிடைக்கவில்லை.

இதையும் படிங்க: காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை தங்கராஜ் மகனை காணவில்லை என்று கடந்த 15ம் தேதி மறைமலை நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் கோவிந்தாபுரம் ஏரி அருகே விக்னேஷ் நண்பர்களுடன் மது அருந்திய போது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது விக்னேஷ் எட்டி உதைத்ததால் கோபடைந்த விசு என்கிற விஸ்வநாதன் கத்தியால் வெட்டி கொலை செய்து விக்னேஷை உடலை ஏரியில் குழிதோண்டி புதைத்தது  தெரியவந்தது.

இதையும் படிங்க:  போட்டுதள்ள கிளப்பிய கணவர்! கள்ளக்காதலனிடம் போட்டுக்கொடுத்த மனைவி! இறுதியில் சல்லி சல்லியாய் சிதைத்த பயங்கரம்

இதனையடுத்து விக்னேஷின் நண்பர்களான கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த விசு (23),  கீழக்கரணை பிள்ளையார் கோவில் பகுதியில் வசித்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த தில்கோஷ் குமார் (24), மற்றும் கோகுலாபுரம் பிள்ளையார் கோவில் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து கோகுலபுரம் பகுதியில் பதுங்கி இருந்த மூன்று பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை வழக்கில் கைதான குற்றவாளி விசு மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

click me!