முதல்முறை SBI டெபாசிட் இயந்திரங்களில் நூதன முறையில் திருட்டு.. ரூ.48,00,000த்துடன் கொள்ளையர்கள் எஸ்கேப்..!

By vinoth kumarFirst Published Jun 22, 2021, 5:30 PM IST
Highlights

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

எஸ்பிஐ ஏடிஎம்களில் நூதன முறையில் ரூ.48 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும் இதில் ஈடுபட்டது வெளிமாநில கும்பல் என சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- எஸ்பிஐ வங்கியின் பணம் டெபாசிட் செய்யும் இயந்திரங்களில் இருந்து நூதன முறையில் தமிழகம் முழுவதிலும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களைச் சேர்ந்த கும்பல் இதனை செய்திருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது. 

பணம் எடுக்கும் மற்றும் டெபாசிட் செய்யும் வசதி கொண்ட இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திருட்டு நடப்பது தமிழகத்தில் முதன்முறை. தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 48 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில், மொத்தமாக உள்ள 18 புகார்களில் 7 புகார்களில் மட்டுமே குறைந்த தொகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எந்த இழப்பும் இல்லை. வங்கிக்குத்தான் இழப்பு. தொழில்நுட்ப குறைபாட்டினால் தான் இது நடந்துள்ளது. ஆனால், இப்போது அந்த குறைபாட்டை சரிசெய்துள்ளனர். இனி இதுபோன்று செய்ய முடியாது.

இதுகுறித்து விசாரிக்க, ஒரு சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் சில மாநிலங்களிலும் இதேபோன்று நிகழ்ந்துள்ளது. சம்மந்தப்பட்ட ஏடிஎம்களில் இனி பணம் எடுக்க முடியாது. பணம் டெபாசிட் செய்யலாம். சென்னையில் பல ஏடிஎம்களில் இவ்வாறு நடைபெற்றுள்ளது. மற்ற மாவட்டங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

click me!