Prabhdeep Kaur: சென்னை திடீரென எகிறும் கொரோனா பாதிப்பு.. எப்படி ஏறுது நீங்களே பாருங்க.. பிரதீப் கவுர் பகீர்.!

By vinoth kumarFirst Published Dec 30, 2021, 6:46 AM IST
Highlights

பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முகக்கவசம் அணிதல், முதியோர்களைப் பாதுகாத்தல், அரங்குகள் உள்ளிட்ட நெருக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டும்.  கூட்டத்தைத் தவிர்க்கவும் கூறியுள்ளார். 

சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் முகக்கவசம் அணிதல், அரங்குகள் உள்ளிட்ட நெருக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டும் என ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனா வைரசின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் முதன்முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவிய போதிலும் இது குறைவான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவித்தன. ஆனாலும் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன.

இந்நிலையில், இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 20 மேற்பட்ட மாநிலங்களில் பரவிய ஒமிக்ரானால் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 252 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதைத் தொடர்ந்து டெல்லியில் 150க்கும் மேற்பட்டோரும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தெலங்கானா, தமிழகம், குஜராத், கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலும் ஒமிக்ரான் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 
இந்நிலையில், ஒமிக்ரான் வைரஸ் பரவலைத் தடுக்க இரவுநேர ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து அசாம், மத்திய பிரதேசம், குஜராத், அரியானா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் நேற்று மட்டும் 294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் கவுர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பல மாதங்களுக்குப் பிறகு, சென்னையில் 4 வாரங்களாக கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. முகக்கவசம் அணிதல், முதியோர்களைப் பாதுகாத்தல், அரங்குகள் உள்ளிட்ட நெருக்கமான இடங்களில் மக்களைச் சந்திப்பதைத் தவிர்க்கவும் வேண்டும்.  கூட்டத்தைத் தவிர்க்கவும் கூறியுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் அருகிலுள்ள மருத்துவமனைகளில் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்  என அறிவுறுத்தியுள்ளார். 

After several months, there is an upward trend with gradual rise in cases for 4 weeks in Chennai. Mask up, protect elderly, avoid meeting people in closed places, avoid crowds and get tested if you have any symptoms pic.twitter.com/rpiOXhytRa

— Prabhdeep Kaur (@kprabhdeep)

மேலும், கடந்த அக்டோபர் 17ம் தேதி 2364 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அக்டோபர் 31ம் தேதி 1959 பேரும், பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை முந்தைய வார பாதிப்பை விட 405 குறைவாக உள்ளது ஆனால், நவம்பர் 14ம் 1665 உள்ளதாகவும், நவம்பர் 28ம் தேதி கொரோனா பாதிப்பு 1595 க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேபோல், டிசம்பர் 12ம் தேதி 120 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டு 1715 என்ற எண்ணிக்கையிலும், டிசம்பர் 26ம் தேதி 174 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டு 1889 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதீப் கவுர் கூறியுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதை  தமிழக முதல்வர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், சென்னை மாநகராட்சி அதிகாரிகளையும் தனது பதிவில் டேக் செய்துள்ளார்.

click me!