கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் ஐடி ரெய்டு.. முக்கிய ஆவணங்கள் சிக்கியது...!

By vinoth kumarFirst Published Jan 20, 2021, 11:22 AM IST
Highlights

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, கோவை  உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான சென்னை பாரிமுனை, கோவை  உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலமான இயேசு அழைக்கிறார் என்கிற மத பிரச்சார அமைப்பை பால் தினகரன் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமாக கோவை காருண்யா பல்கலைக்கழகம்  உள்பட பல்வேறு கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன. இதுதவிர இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் தனியாக அறக்கட்டளை தொடங்கி ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு பால் தினகரன் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த அறக்கட்டளைக்கு வெளிநாடுகளில் இருந்தும் நிதியுதவி கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில், கல்வி  நிறுவனம் மூலம் கிடைக்கும் வருமானம், ஜெப கூட்டங்களுக்கு உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து வரக்கூடிய நன்கொடைகளை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிதியை கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் பால் தினகரன் மீது வரிஏய்பு புகார் எழுந்தது. 

இதனையடுத்து, பால் தினகரனுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள், பிரச்சார கூடங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

click me!