சென்னை ராயபேட்டையில் அசுர வேகத்தில் சென்ற சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் மீது வேகமாக மோதியதில் காவலர் தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ராயபேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் போக்குவரத்து காவல் துறையினர் நேற்று வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்களை பரிசோதனை செய்து வந்தனர். உதவி ஆய்வாளர்கள் இளங்கோவன், மோகன், காவலர் ஜெயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆய்வின் போது சந்தேகத்திற்கு இடமாக மெரினா நோக்கி வேகமாக வந்த காரை நிறுத்த முற்பட்டனர். அப்போது கார் காவலர்கள் மீது இடிக்கும் தொனியில் சென்றது. அதனை பொருட்படுத்தாத காவலர் ஜெயகுமார் துணிவுடன் காரை வழிமறித்துள்ளார். இருப்பினும் கார் வேகமாக சென்று காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜெயகுமார் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோதனை பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மீது கார் வேமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.