தனியார் பள்ளிகளுக்கு கிடுக்குப்படி... உயர்நீதிமன்ற உத்தரவால் பெற்றோர்கள் நிம்மதி..!

By Thiraviaraj RMFirst Published May 18, 2019, 5:37 PM IST
Highlights

ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஸ்கூல்பேக், லஞ்ச்பேக் வாங்க வற்புறுத்தக்கூடாது என தனியார் பள்ளி நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவர்களுக்கு தேவையானவற்றை மட்டும் இல்லை. அநாவசியமான பொருட்களையும் பள்ளி மூலம் விற்பனை செய்து பெற்றோர்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தி வருகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள். 

இந்நிலையில், கோவை மாதா அமிர்தானந்தமயி அறக்கட்டளைக்கு சொந்தமான பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக ஹேமலதா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பாடப் புத்தகங்களுக்கு ரூ. 5,000, சீருடை, லஞ்ச் பேக் போன்ற பொருட்களுக்கு ரூ.500 கேட்பதாக புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.  

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் போன்ற பொருட்களை வாங்கும்படி பெற்றோரை பள்ளி நிர்வாகங்கள் வற்புறுத்தக்கூடாது. பாட புத்தகங்கள், சீருடைகள், காலணிகள் தவிர பிற பொருட்களை வாங்கும்படி நிர்ப்பந்திக்க கூடாது என அறிவுறுத்தியது. இந்த வழக்கை ஜூன் 10-ம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

click me!