புகைப்பட ஆதாரத்துடன் போட்டுக் கொடுத்த பொதுமக்கள்... ஹெல்மெட் அணியாததால் பணியிடை நீக்கம்..!

By vinoth kumarFirst Published Jul 26, 2019, 3:34 PM IST
Highlights

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற மாம்பலம் காவல் உதவி ஆய்வாளர் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை முழுவதும் ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. தற்போது பின்னால் அமர்ந்து இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் போலீசார் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினரே ஹெல்மெட் அணியாமல் செல்வதாக நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

இதனையடுத்து, தமிழக டிஜிபி திரிபாதி அனைத்து காவல் நிலையத்திற்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பினார். அதில் அனைத்து காவலர்களும் போக்குவரத்து விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தார். போக்குவரத்து விதிகளை பின்பற்றாத காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், மாம்பலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மதன்குமார் என்பவர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்றதை புகைப்படம் எடுத்த மக்களில் ஒருவர் போக்குவரத்துக் காவல்துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்ட GCTP செயலி மூலம் புகார் அளித்தார். இதை, உடனே சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மதன்குமாரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார். 

click me!