தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை 8 மணிவரை கடுமையான பனிமூட்டம் நிலவியதை அடுத்து முகப்பு விளக்கை எரியவிட்ட படியே வாகனங்கள் சென்றன.
தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாகவே வழக்கத்தை விட அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 8 மணிவரை மூடு பணி நிலவி வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால், முகப்பு விளக்கை எரியவிட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
இந்நிலையில், கடுமையான பனிமூட்டம் காரணமாக பெங்களூரு, மும்பையிலிருந்து சென்னை வந்த 2 விமானங்கள் அரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. இதேபோன்று பல்வேறு விமானங்கள் பனிமூட்டத்தால் தரையிறக்க முடியாமல் சிறிது தாமதமாக தரையிறக்கப்பட்டது. மேலும் ரயில்களின் வேகமும் குறைக்கப்பட்டுள்ளது.