சிறுமி கடத்தல் - வாலிபர் போக்சோவில் கைது

Published : Jun 22, 2019, 06:49 PM IST
சிறுமி கடத்தல் - வாலிபர்  போக்சோவில் கைது

சுருக்கம்

திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தில்  சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தில்  சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கட்டளை கிராமத்தை  சேர்ந்தவர் ராமு. இவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த வாலிபர், கடந்த மே மாதம் 3ம் தேதி சிறுமியை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் காவல்துறையினர் ராமுவை தேடி வந்தனர். மேலும், ராமுவின் செல்போன் எண்ணை வைத்து, சிக்னல் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர், ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார், நெல்லூர் சென்று, அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ராமுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவருடன் இருந்த சிறுமியை மீட்டு வந்து, பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர், ராமுவை, கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பெண் தாதா அஞ்சலைக்கு 2 ஆண்டு சிறை! எந்த வழக்கில் தெரியுமா?
ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு