வாங்க .. சென்னை மெட்ரோவில் இலவச பயணம் பண்ணலாம் .. - மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு .. பயணிகள் உற்சாகம் ..

Published : Aug 17, 2019, 11:34 AM ISTUpdated : Aug 17, 2019, 12:26 PM IST
வாங்க .. சென்னை மெட்ரோவில் இலவச பயணம் பண்ணலாம்  .. - மெட்ரோ ரயில் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு .. பயணிகள் உற்சாகம் ..

சுருக்கம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில்  ஏற்பட்டிருக்கும் கோளாறு சரி செய்யப்படும் வரையில் பொதுமக்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது .

சென்னையில் கடுமையாக இருக்கும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது தான் மெட்ரோ ரயில் திட்டம் . தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மெட்ரோ ரயில் சேவை மூலம் பலனடைந்து வருகின்றனர் . இதில் ஒரு ரயில் நிறுத்தத்திற்கு 10 ரூபாய் சென்னையில் வசூலிக்க படுகிறது .

இந்த நிலையில் தான் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் பழுதாகி விடுகின்றன . இதனால் விரைவாக டிக்கெட் வழங்க முடிவதில்லை.

இன்று காலையும் டிக்கெட் வழங்கும் இயந்திரதத்தில் பழுது ஏற்பட்டுள்ளது . அதை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும் என தெரிகிறது . இதனால் மெட்ரோ நிர்வாகம் அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . 

அதன்படி கோளாறு சரிசெய்ய படும் வரையில் பொது மக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது . இதனால் பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர் .எனினும் எவ்வளவு நேரம் இலவச பயணம் நீடிக்கும் என்பதை பற்றி எந்த தகவலும் இல்லை .

PREV
click me!

Recommended Stories

TVK Supporter Arrested: சென்னையில் அதிர்ச்சி! வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளரை தட்டி தூக்கிய போலீஸ்! சிக்கியது எப்படி?
Chennai : சென்னைையே மாறப்போகுது.! பேருந்து – ரயில் கனெக்டிவிட்டி ரெடி.. இதை கவனிச்சீங்களா!