முன்னாள் அமைச்சர் மகன் வீட்டில் ஐடி ரெய்டு...

By Asianet TamilFirst Published Jun 28, 2019, 9:29 AM IST
Highlights

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் நிதியமைச்சர் அப்துல் ரஹிம் ரத்தெரின் மகன், ஹிலால் ரத்தெர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஏராளமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், முன்னாள் நிதியமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவராக அப்துல் ரஹிம் ரத்தெர் உள்ளார். இவரது மகன் ஹிலால் ரத்தெருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில், வருமான வரித்துறையினர், நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

நிதி மோசடி, வரி ஏய்ப்பு போன்ற பல புகாரின்படி, சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள், பணம் ஆகியவை சிக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஹிலால் ரத்தெர் கூறுகையில், நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தங்களது கட்சி போட்டியிட்டதாலும், மத்தியில் ஆளும் பாஜகாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதாலும் இந்த வருமான வரிசோதனை நடத்தப்பட்டதாக கூறினார்.

click me!