இரக்கமற்ற கொடூர கொரோனா..! சென்னையில் 15 பச்சிளம் குழந்தைகளுக்கு பாதிப்பு..!

By Manikandan S R SFirst Published May 10, 2020, 3:56 PM IST
Highlights

பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஆண் குழந்தைகளும் 5 பெண் குழந்தைகளும் அடங்கி உள்ளன.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தீவிரம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்தை நெருங்கியிருக்கும் நிலையில் 2,109 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அசுர வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,535 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்திலேயே தலைநகர் சென்னையில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று வெளியான அறிவிப்பில் சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து சென்னையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,330 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி சென்னையில் இருக்கும் 15 மண்டலங்களில்அதிகபட்சமாக ராயபுரத்தில் 571 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தலைநகரில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகளவில் ஏற்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 

இன்று மட்டும் பிறந்து ஒரே நாளான குழந்தை உட்பட 15 பச்சிளம் குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஆண் குழந்தைகளும் 5 பெண் குழந்தைகளும் அடங்கி உள்ளன. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அனைத்தும் தனிமை சிகிச்சையில் வைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர். இன்று காலையில் சென்னையில் தூய்மை பணியாளர் ஒருவர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதன்மூலம் தமிழகத்தில் தற்போது வரை 44 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.

click me!