குத்தாட்டம் ஆடிய பெண் போலீஸ் சஸ்பெண்ட்

By Asianet TamilFirst Published Jul 27, 2019, 2:07 AM IST
Highlights

குஜராத் மாநிலம், மெக்சானா மாவட்டத்தில் உள்ள லங்கனாஜ் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பணியாற்றி வருபவர் அர்பிதா சவுத்ரி. சமூக வலைதளமான டிக்டாக்கில் அதிக ஆர்வம் ெகாண்டவர். இந்தி பாடல்களுக்கு அடிக்கடி நடனமாடி அதை டிக்டாக்கில் வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில், காவல் நிலையத்தில் கைதிகள் அடைக்கப்படும் அறையின் முன்பாக சீருடை அணியாமல் சாதாரண உடையில் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடி, அதை டிக்டாக்கில் அர்பிதா வெளியிட்டார். அந்த வீடியோ வைரலாக பரவியது. காவல் நிலையத்தில் பொறுப்பின்றி அவர் நடனமாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட எஸ்பி நிலேஷ் ஜாடியா, காவல் நிலையத்தில் பொறுப்பின்றி நடனம் ஆடியதற்காக அர்பிதாவை சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.

click me!