விரட்டி வரும் புயல்... ஃபானிக்கே பானி கொடுக்கத் தயாராகும் தமிழக அரசு..!

By vinoth kumarFirst Published Apr 26, 2019, 2:26 PM IST
Highlights

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால் தமிழகம் மற்றம் புதுச்சேரியில் ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர்.

வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 100 கி.மீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம். மேலும் மீன்பிடிக்க சென்றவர்கள் வரும் 28-ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில் புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தின்  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். மேலும் மாநில, தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். 

click me!