இன்று முதல்... மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட நல்ல செய்தி... பயணிகள் மகிழ்ச்சி...!

By Kanimozhi PannerselvamFirst Published Jun 27, 2021, 11:38 AM IST
Highlights

இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூடுதல் ரயில்களை இயக்க மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 

கொரோனா 2வது அலை காரணமாக கடந்த மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதனால் மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து விதமான பொது போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டன. தற்போது முழு ஊரடங்கிற்கு கை மேல் பலனாக கொரோனா பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று கணிசமாக குறைந்துள்ளது. எனவே தமிழக அரசும் பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. 

குறிப்பாக சென்னையில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து பிற மாவட்டங்களை விட கூடுதலாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 21-ம் தேதி முதல் பொதுமக்களுக்காக மெட்ரோ ரயில் கூடுதல் பாதுகாப்புடன் இயக்க மெட்ரோ நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கடந்த முறை தமிழக அரசு வெளியிட்ட தளர்வுகளின் படி, சென்னையில் அரசு அலுவலகங்கள், வங்கி, காப்பீட்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் 100 சதவீத பணியாளர்களுடனும், ஐ.டி.நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடனும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பொதுமக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகமும் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இனி வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறைகளில் கூடுதலாக காலை 7 மணி இரவு முதல் 9 மணி வரை 10 நிமிடங்களுக்கு ஒரு முறை அனைத்து வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.  

பொதுமக்கள் உரிய பாதுகாப்புடன் முகக் கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடித்து மெட்ரோ ரயிலில் பயணிக்க வேண்டும் எனவும் அப்படி விதிமுறைகளை பின்பற்றாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்த நிலையில் கடந்த 21ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை விதிமுறைகளை பின்பற்ற அவர்களிடமிருந்து 2600 ரூபாய் அபராதம் பெற்றிருப்பதாக மெட்ரோ நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!