நெருங்கும் தேர்தல்... தமிழ்நாட்டில் மீண்டும் களம் இறங்கிய அமலாக்கத்துறை.!! 10 இடங்களை சுற்றிவளைத்தால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Mar 14, 2024, 10:18 AM IST

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நாவாஸ் கனிக்கு சொந்தமான எஸ்டி கொரியர் நிறுவனத்தில் சோதனை நடைபெறுவது அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 


தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக  அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவின் அமைச்சர்களாக இருந்த செந்தில் பாலாஜி, பொன்முடி வீடுகளில் சோதனை நடத்தி ஆவணங்கள் கைப்பற்றியது. இதனையடுத்து செந்தில் பாலாஜியையும் கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் அலுவலங்கள், மணல் குவாரிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முறைகேடுகள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்பட்டது.

Latest Videos

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை தமிழகத்தில் சோதனை நடத்ததாத நிலையில் தற்போது மீண்டும் களம் இறங்கியுள்ளது. அந்தவகையில், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தியாகராய நகர் பசுல்லா சாலையில் உள்ள சாய் சுக்கிரன் என்ற நிறுவனத்தில் சோதனை நடைபெறுகிறது.

சாய் சுக்கிரன் நிறுவனம் தேசிய நெடுஞ்சாலைகளில் பெயிண்ட் அடிக்கும் ஒப்பந்தம் எடுத்து பணியில் ஈடுபட்டு வருகிறது. இதே போல இந்த நிறுவனத்திற்கு சொந்தமான திருவான்மியூர், முகப்பேர், கொளத்தூர் பகுதிகளிலும் உள்ள அலுவலகங்களிலும் சோதனையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் எஸ்.டி கொரியர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. 

click me!