மது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..! தேர்தல் ஆணையம் அதிரடி..!

Published : May 21, 2019, 03:44 PM IST
மது பிரியர்களுக்கு ஷாக்... 23-ம் தேதி சரக்கு கிடையாது..! தேர்தல் ஆணையம் அதிரடி..!

சுருக்கம்

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதி இரவு 12 மணி வரை அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று மக்களவைத் தேர்தல், 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கடந்த 19-ம் தேதியன்று அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டபிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எந்த கலவரமும் நடைபெறாமல் இருக்க முன்னேச்சரிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தினமான மே 23-ம் தேதி அன்று இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உத்தரவிட்டுள்ளார். இதனால் மது பிரியர்கள் முன்னேச்சரிக்கையாக சரக்கு வாங்கி வைத்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?