பொதுமக்கள் கவனத்திற்கு.. சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு மாற்றம்.! முழு விபரம் இதோ

By Raghupati R  |  First Published Nov 12, 2022, 10:18 PM IST

சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.


சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், மெட்ரோ ரெயில் பணிகள் காரணமாக கடந்த 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒருவார காலத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டது. 

12ம் தேதி முதல் அடுத்த மூன்று வருடத்திற்கு கவிஞர் பாரதிதாசன் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. அதன்படி டி.டி.கே. சாலையில் சேமியர்ஸ் சாலை சந்திப்பில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை சந்திப்பு வரை ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே போல் சி.பி.ராமசாமி சாலையில் சி.வி.ராமன் சாலை சந்திப்பில் இருந்து ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க..அதிமுக உடன்பிறப்புகளே.! களத்தில் குதியுங்கள்.! அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

undefined

அண்ணா சாலையில் இருந்து கவிஞர் பாரதிதாசன் சாலை வழியாக டி.டி.கே. சாலைக்கு செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதையில் அனுப்ப உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை, எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1-வது பிரதான சாலை வழியாகவும் செல்லலாம். டி.டி.கே. சாலையில் இருந்து ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் திருவள்ளுவர் சாலை மற்றும் எல்டாம்ஸ் சாலை வழியாகவும், இலகுரக வாகனங்கள் சீதம்மாள் காலனி 1வது பிரதான சாலை அல்லது சி.வி.ராமன் சாலை வழியாக மாற்று பாதையில் செல்லலாம். 

டி.டி.கே. சாலையில் உள்ள ஆழ்வார்பேட்டை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பஸ்கள் நேராக சி.பி. ராமசாமி சாலை வழியாக சேமியர்ஸ் சாலைக்கு செல்லலாம். லஸ் சர்ச் சாலை வழியாக ஆழ்வார்பேட்டை சிக்னலுக்கு செல்ல வேண்டிய மாநகர பஸ்கள் டி.டி.கே. சாலை, ஆழ்வார்பேட்டை மேம்பால சர்வீஸ் சாலை வழியாக செல்லலாம். இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..உச்சநீதிமன்ற உத்தரவு - நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 5 பேர் விடுதலை !

அதேபோல மற்றொரு அறிவிப்பில், வடகிழக்குப் பருவ மழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம்

மழைநீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள் : வேளச்சேரி சுரங்கபாதை.

மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடை பெற்றுள்ளது: வேளச்சேரி சுரங்கப்பாதை முழுவதும் மழைநீர் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மாநகரப் போக்குவரத்தில் மாற்றம் எதுவுமில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..பாஜகவில் சேரப் போகும் முக்கிய தலைகள்.. திமுக எங்கள் எதிரி தான், ஆனால் ? அண்ணாமலை சொன்ன சீக்ரெட் !

click me!