ஓடும் ரயிலில் குடிபோதையில் தொல்லை.. டுவிட்டரில் பறந்த புகார்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

Published : Apr 19, 2022, 10:12 AM ISTUpdated : Apr 19, 2022, 10:17 AM IST
ஓடும் ரயிலில் குடிபோதையில் தொல்லை.. டுவிட்டரில் பறந்த புகார்.. அடுத்து என்ன நடந்தது தெரியுமா?

சுருக்கம்

குருவாயூர் விரைவு ரயிலில் பயணம் செய்த வசந்த் என்ற பயணி தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குடிபோதையில் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தங்கள் மீது எச்சில் உமிழ்ந்து மிகுந்த தொல்லை கொடுப்பதாகவும், உரிய நடவடிக்கை தேவை எனவும் புகைப்பட ஆதாரத்துடன் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக காவல்துறையை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். 

ஓடும் ரயிலில் குடிபோதையில் பயணிகளை ஆபாசமாகப் பேசி தொல்லை கொடுத்த சிஆர்பிஎப் வீரரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

குடிபோதையில் தொல்லை

குருவாயூர் விரைவு ரயிலில் பயணம் செய்த வசந்த் என்ற பயணி தாங்கள் பயணம் செய்யும் பெட்டியில் குடிபோதையில் ஒருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டி, தங்கள் மீது எச்சில் உமிழ்ந்து மிகுந்த தொல்லை கொடுப்பதாகவும், உரிய நடவடிக்கை தேவை எனவும் புகைப்பட ஆதாரத்துடன் தெற்கு ரயில்வே மற்றும் தமிழக காவல்துறையை குறிப்பிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். 

டுவிட்டரில் பறந்த புகார்

இதனை அறிந்த தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திர பாபு உரிய நடவடிக்கை எடுக்க ரயில்வே காவல்துறைக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, சென்னைக்கு வந்தடைந்த குருவாயூர் விரைவு ரயிலில் உள்ள S10 பெட்டியை சோதனையிட்ட எழும்பூர் ரயில்வே காவல் துறையினர் அங்கு சக பயணிகளுக்கு தொல்லை கொடுத்த  நபரை கைது செய்தனர். 

சிஆர்பிஎப் வீரர் கைது

கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்த விபின் (33) என்பதும் மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. மேலும், தனது விடுமுறை முடிந்து விபின் பணியில் சேர பயணம் மேற்கொண்டதும், பயணத்தின் போது சி.ஆர்.பி.எஃப் வீரர் விபின் மது அருந்தியிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. 

இதையும் படிங்க;- ஆபாச சைகை.. கண்ட இடத்தில் கை வைத்து சில்மிஷம்.. ரயிலில் அலறி கூச்சலிட்ட சென்னை பெண் டாக்டர்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போதையில் தாறுமாறாக ஓடிய கார்! விரட்டி சென்ற காவலர் உயிரி*ழப்பு! இளைஞரை HIT and RUN பிரிவில் தூக்கிய போலீஸ்!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!