குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரம் அபராதம்... - புதிய சட்டத்திருத்த மசோதா

By Asianet TamilFirst Published Jul 16, 2019, 12:55 PM IST
Highlights

ம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனையோடு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 

ஆம்புலன்சுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதமும், சிறாரை வாகனம் ஓட்ட அனுமதித்தால் 3 ஆண்டு சிறை தண்டனையோடு ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளது. 

விபத்துக்களை குறைக்கும் பொருட்டு தண்டனை, அபராதத்தை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டத் திருத்தம் 201-க்கான மசோதா மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தாக்கல் செய்தார்.

அதன்படி, ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல், மறித்தபடி செல்வோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், லைசன்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.5 ஆயிரம், வாகன இன்சூரன்ஸ் நகல் இல்லாவிட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுவோருக்கு ரூ.2 ஆயிரம், அதிவேகத்துக்கு ரூ.1000 முதல் ரூ.2000, சீட் பெல்ட் அணியாமலோ, ஹெல்மெட் அணியாமலோ சென்றால் ரூ.1000 என அபராதம் வசூலிக்கப்படவுள்ளது.

18 வயதுக்கு உட்பட்டோர் வாகனம் ஓட்டுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. அவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனையோடு ரூ.25 ஆயிரம் அபராதம், வாகன பதிவை ரத்து செய்தும் தண்டனை விதிக்க புதிய சட்டத்திருத்த மசோதா வழிவகுக்கிறது.

போக்குவரத்து விதி மீறும் வாடகைக் கார் சேவை நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம், வாகனங்களில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிகப்படக் கூடும். அதி வேகத்துக்கு ரூ.1000 என இருந்த அபராதம் ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது.

இதுபோன்ற கண்டிப்பான அபராதத்தால் விபத்துக்களும், அதனால் பறிபோகும் விலைமதிப்பற்ற உயிர்களின் எண்ணிக்கையும் குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

click me!