அய்யையோ முகிலனை நாய் கடிச்சிடுச்சி... சிபிசிஐடி ஷாக்!!

Published : Jul 07, 2019, 03:12 PM IST
அய்யையோ முகிலனை நாய் கடிச்சிடுச்சி... சிபிசிஐடி ஷாக்!!

சுருக்கம்

சமூக செயற்பாட்டாளர் முகிலன்  வேலூர் அடுக்கம்பாறை  மருத்துவமனையில் பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடித்த நிலையில், நாய் கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும் சிபிசிஐடி ஷாக் தகவலைக் கூறியுள்ளது.

சமூக செயற்பாட்டாளர் முகிலன்  வேலூர் அடுக்கம்பாறை  மருத்துவமனையில் பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடித்த நிலையில், நாய் கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும் சிபிசிஐடி ஷாக் தகவலைக் கூறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே மாதம் தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 13 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஆவண படத்தை முகிலன் என்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் வெளியிட்டார். ஆவணப்படத்தை வெளியிட்ட பின்னர் சென்னையில் இருந்து ரெயிலில் மதுரைக்கு சென்றபோது அவர் மாயமானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் முகிலன் திருப்பதியில் இருப்பதாக தகவல் வெளியானதையடுத்து முகிலன் திருப்பதியில் இருக்கிறாரா என்பதை விசாரித்து தெரிவிக்க ஆந்திர போலீசிடம் சிபிசிஐடி உதவிக்கோரியது. இதன்படி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஆந்திர போலீசாருக்கு வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று காட்பாடி ரெயில்வே காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர போலீசார், முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

பின்னர் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் பத்திரமாக சென்னைக்கு அழைத்து வந்த தமிழக சிபிசிஐடி போலீஸார், முகிலனை எழுப்பூரில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்துவந்து விசாரித்து வருகின்றனர். அதில், ஒருவாரத்திற்கு முன் நாய் கடித்ததாக மருத்துவர்களிடம் முகிலன் கூறியதாகவும் சிபிசிஐடி போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்த போது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடித்த நிலையில், நாய் கடிக்கு ஊசி போடப்பட்டதாகவும், முகிலன் சரியாக சாப்பிடாததால்  உடல் பலகீனமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகிறது. மேலும், முகிலனின் வாக்குமூலத்தை வீடியோ மூலம் பதிவு செய்யும் வேலையும் ஒருபக்கம் நடந்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

Tomato Price Today: தாறுமாறா குறைந்த தக்காளி விலை.! இனி தினமும் தக்காளி தொக்குதான் வீட்டுல.!
Chennai Power Cut: இன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை பவர் கட்! சென்னையில் எந்தெந்த இடங்களில் தெரியுமா?