அலட்சியம் வேண்டாம்.. காய்ச்சல் நமக்கு வராது என்று நினைக்காதீங்க.. எச்சரிக்கும் சுகாதாரத்துறை செயலாளர்..!

By vinoth kumarFirst Published Oct 10, 2020, 12:45 PM IST
Highlights

அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், தற்போது பொதுமக்களிடையே முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிகாரிகளை பார்த்தால் மட்டுமே முககவசம் அணிகின்றனர் என்றும், தற்போது பொதுமக்களிடையே முககவசம் பயன்படுத்தும் முறை குறைந்துள்ளது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டை மண்டலத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்;- தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி முழுவீச்சில் நடைபெறுகிற காரணத்தால், எத்தனை பேருக்கு பரிசோதனை செய்கிறோமோ அதில் 10 விழுக்காடு மட்டுமே தொற்று உறுதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மாவட்டங்களில் 6 விழுக்காடுக்கும் கீழ் குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையின் சில மண்டலங்கள் மற்றும் கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் தனி கவனம் செலுத்தி கண்காணிக்கப்படுகிறது.

தற்போது முகக்கவசம் பயன்படுத்தும் நிலை சற்று குறைந்துள்ளது. இதை அதிகரிக்கும் நோக்கத்தில் ஒரு பக்கம் அபராதம் வசூல் செய்தாலும் கூட  வீடு வீடாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை எடுத்து கூறி  விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. முன்கூட்டியே அறிகுறிகள் வரும் போது சோதனை செய்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். 

அதனால்  இறப்பு விகிதம் 1.2 ஆக குறைந்துள்ளது. அதை 1 சதவீதத்திற்கு குறைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கண்டிப்பாக முகக்கவசம் அணியுங்கள், தேவையில்லாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டாம், கூட்டம் இருக்கும் இடத்தில் சமூக  இடைவெளியை பின்பற்றுங்கள், கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தில் முகக்கவசத்தை இறுக்கமாக அணிந்து கொள்ளுங்கள் போன்ற அறிவுரைகளை  வழங்கி வருகிறோம். அதிகாரபூர்வமாக இன்று அதிகரிக்கும், நாளை குறையும் என்பது இல்லை. 

மேலும், கணக்கீடு செய்பவர்கள் செய்துகொண்டு தான் இருப்பார்கள். தற்போது  மருத்துவமனையில் 45 ஆயிரத்துக்குள் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை கழுவுதல், சமூக இடை வெளியை கடைபிடிப்பது போன்றவை முறையாக பின்பற்ற வேண்டும். அதைப்போன்று ஒவ்வொரு துறைக்கும் வழிகாட்டு முறைகள்  வெளியிடப்பட்டுள்ளது. அதை முறையாக கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

click me!