ஆடம்பர உணவுகள் வேண்டாம்.. சிம்பிளாக செய்தால் போதும்.. கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் வேண்டுகோள்.!

Published : Jun 10, 2021, 11:53 AM ISTUpdated : Jun 10, 2021, 11:58 AM IST
ஆடம்பர உணவுகள் வேண்டாம்.. சிம்பிளாக செய்தால் போதும்.. கலெக்டர்களுக்கு தலைமைச்செயலாளர் வேண்டுகோள்.!

சுருக்கம்

ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதில் ஆய்வு செய்ய வரும்போதும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காற்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆய்விற்காக மாவட்டங்களுக்கு வரும்போது ஆடம்பர உணவு ஏற்பாடுகளை தவிர்த்திடுமாறு தலைமை செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதில் இருந்து அரசு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு வருகின்றனர். தமிழக அரசின் தலைமை செயலாளராக இறையன்பு ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். குறிப்பாக, தலைமைச் செயலாளர் இறையன்புவின் நியமனம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி, பதவியேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். 

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் சூழலில், தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது சில மாவட்டங்களில் தடல், புடல் விருந்துகள் வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனை தவிர்க்கும் விதமாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஒரு சுற்றரிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ஆய்வின்போது ஆடம்பர உணவுகள் வேண்டாம் என தற்போது மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதத்தின் மூலமாக வலியுறுத்தியுள்ளார். அதில் ஆய்வு செய்ய வரும்போதும் மாவட்ட நிர்வாகத்தினர் ஆடம்பர உணவுகளை ஏற்பாடு செய்ய வேண்டாம். காலை, இரவு நேரங்களில் எளிய உணவும், மதியம் இரண்டு காற்கறிகளுடன் கூடிய சைவ உணவும் போதும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏற்கனவே, அரசு விழாக்களில் தான் எழுதிய புத்தகங்களைப் பரிசாக வழங்க கூடாது. அது சுய விளம்பரமாக பார்க்கக்கூடும் என தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
குட்நியூஸ்.. சென்னை மாநகரப் பேருந்து பாஸ் கட்டணம் அதிரடி குறைப்பு.. எப்படி பெறுவது?