தீபாவளி பண்டிகை.. கல்லா கட்டிய தமிழக அரசு.. மது விற்பனை எவ்வளவு தெரியுமா? தூங்கா நகரத்தில் விற்பனை ஜோர்..!

By vinoth kumarFirst Published Nov 15, 2020, 11:40 AM IST
Highlights

தீபாவளி பண்டிகையொட்டி நவம்பர் 14 மற்றும் 14ம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ. 466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தீபாவளி பண்டிகையொட்டி நவம்பர் 14 மற்றும் 14ம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ. 466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் 5,800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் சராசரியாக, 65 கோடி ரூபாய்க்கும், ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை நாட்களில், 90 கோடி ரூபாய்க்கும், விசேஷ நாட்களில், 120 கோடியை தாண்டியும் மது விற்பனை நடைபெற்று வருகிறது. 2019 தீபாவளி பண்டிகையின் போது, இரண்டு நாட்களில், 400 கோடியை தாண்டி மது விற்பனை நடந்தது. 

நடப்பாண்டு தீபாவளி பண்டிகை நவம்பர்14 சனிக்கிழமை கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், இரண்டு நாட்களில், 400 கோடிக்கும், முந்தைய தினமான வெள்ளிக்கிழமையில், 100 கோடி என, மூன்று நாட்களில், 500 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்ய அதிகாரிகள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி நவம்பர் 13 மற்றும் 14ம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூ. 466 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 13ம் தேதி ரூ.227 கோடிக்கும், நவம்பர் 14ம் தேதி ரூ.237.91 கோடிக்கும் மது  விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் சுமார் ரூ.104 கோடிக்கும், சென்னை ரூ.94,36 கோடிக்கும், திருச்சி ரூ.95.47 கோடி, கோவை ரூ.84.56 கோடி, சேலம் ரூ.87.58 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

click me!