சென்னையில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு.. கெத்து காட்டும் கொங்கு மண்டலம்.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 8, 2020, 8:45 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 600 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பாதிப்பு  எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம். 
 

தமிழ்நாட்டில் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இன்று 13980 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதில் 600 பேருக்கு தொற்று உறுதியானது. வழக்கம்போலவே சென்னையில் தான் இன்றும் அதிகமான பாதிப்பு. 

சென்னையில் மட்டும் 399 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3043ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக விழுப்புரம், கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கோயம்பேட்டிலிருந்து திரும்பியவர்களால் பாதிப்பு அதிகரித்துவந்த நிலையில், இன்று அரியலூரில் ஒரு பாதிப்பு கூட பதிவாகவில்லை. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக அதிகபட்சமாக திருவள்ளூரில் 75 பேருக்கும் கடலூரில் 34 பேருக்கும் செங்கல்பட்டில் 26 பேருக்கும் விழுப்புரத்தில் 21 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. 

இன்று கொரோனா உறுதியான மற்ற மாவட்டங்களில் எல்லாம் பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் உள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாகவே புதிதாக ஒரு பாதிப்பு கூட உருவாகவில்லை. நீண்ட நாட்களாக பச்சை மண்டலமாக இருந்த கிருஷ்ணகிரியில் இன்று 2 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை 10ஆக அதிகரித்தது. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 246

செங்கல்பட்டு - 184

சென்னை - 3043

கோவை - 146

கடலூர் - 390

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 107

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 58

காஞ்சிபுரம் - 97

கன்னியாகுமரி - 25

கரூர் - 47

கிருஷ்ணகிரி - 10

மதுரை - 113

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 76

நீலகிரி - 13

பெரம்பலூர் - 73

புதுக்கோட்டை - 5

ராமநாதபுரம் - 24

ராணிப்பேட்டை - 50

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 52

தஞ்சாவூர் - 65

தேனி - 55

திருப்பத்தூர் - 23

திருவள்ளூர் - 270

திருவண்ணாமலை - 67

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 30

திருநெல்வேலி - 72

திருப்பூர் - 114

திருச்சி - 63

வேலூர் - 29

விழுப்புரம் - 226

விருதுநகர் - 38.

click me!