சென்னையில் 7000ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 18, 2020, 8:02 PM IST
Highlights

சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துவிட்ட நிலையில், மாவட்ட வாரியாக பாதிப்பு விவரத்தை பார்ப்போம்.
 

தமிழ்நாட்டில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 11,760ஆக அதிகரித்துள்ளது. இந்த 536 பேரில் 364 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை, 7117ஆக உயர்ந்துள்ளது. 

இன்று பாதிப்பு உறுதியான 536 பேரில் 46 பேர் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள். மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்களை தவிர்த்து, பார்த்தால், தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்கள் கொரோனா பாதிப்பில்லாத மாவட்டங்கள்.

கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்து பாதிப்பில்லாத மாவட்டங்களாக நீடிக்கின்றன. சேலத்தில் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 5 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோலவே திண்டுக்கல், கடலூர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் மகாராஷ்டிராவில் வந்தவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக தூத்துக்குடியில் தான் மகாராஷ்டிராவிலிருந்து வந்த 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 537

சென்னை - 7117

கோவை - 146

கடலூர் - 418

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 123

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 100

காஞ்சிபுரம் - 203

கன்னியாகுமரி - 44

கரூர் - 73

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 163

நாகப்பட்டினம் - 50

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 7

ராமநாதபுரம் - 37

ராணிப்பேட்டை - 83

சேலம் - 49

சிவகங்கை - 26

தென்காசி - 70

தஞ்சாவூர் - 72

தேனி - 88

திருப்பத்தூர் - 29

திருவள்ளூர் - 566

திருவண்ணாமலை - 155

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 85

திருநெல்வேலி - 206

திருப்பூர் - 114

திருச்சி - 67

வேலூர் - 34

விழுப்புரம் - 312

விருதுநகர் - 54.

click me!