குட் நியூஸ்: 20 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 11, 2020, 9:33 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு அதிகபட்சமாக ஒரே நாளில் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், 20 மாவட்டங்களில் இன்று ஒரு தொற்று கூட இல்லை. 
 

தமிழ்நாட்டில் இன்று 11,584 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 798 பேருக்கு தொற்று உறுதியானது. எனவே பாதிப்பு எண்ணிக்கை 8002ஆக அதிகரித்துள்ளது. இன்றும் அதிகபட்சமாக சென்னையில் 538 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 4371ஆக அதிகரித்துள்ளது. 

சென்னைக்கு அடுத்தபடியாக இன்று அதிகபட்ச பாதிப்பு திருவள்ளூரில் தான். திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 97 பேருக்கும் செங்கல்பட்டில் இன்று 90 பேருக்கும் கொரோனா உறுதியானதையடுத்து முறையே அந்த மாவட்டங்களில் முறையே பாதிப்பு 440 மற்றும் 356ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டில் கொரோனா உறுதியான 90 பேருமே கோயம்பேடு மார்க்கெட்டுடன் தொடர்புடையவர்கள். கோயம்பேட்டை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக அதிகமான பாதிப்பிற்குள்ளான கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இன்று ஒருவருக்கு கூட தொற்று இல்லை.

அதேபோல ஈரோடு, சிவகங்கை மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக திருப்பூரும் கொரோனாவிலிருந்து முழுமையாக மீண்ட மாவட்டமாகியுள்ளது. திருப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேரும் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். 

கோவையில் கடந்த 10-15 நாட்களாகவே புதிய பாதிப்பு உறுதியாகவில்லை. இன்று 20 மாவட்டங்களில் ஒருவருக்கு கூட தொற்று இல்லை. கோவை, கடலூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாகை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர், திருநெல்வேலி, திருப்பூர், திருச்சி, விழுப்புரம் ஆகிய 20 மாவட்டங்களிலும் இன்று ஒருவருக்குக்கூட கொரோனா தொற்றில்லை. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 308

செங்கல்பட்டு - 356

சென்னை - 4371

கோவை - 146

கடலூர் - 395

திண்டுக்கல் - 109

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 59

காஞ்சிபுரம் - 132

கன்னியாகுமரி - 25

கரூர் - 48

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 121

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 105

புதுக்கோட்டை - 6

ராமநாதபுரம் - 30

ராணிப்பேட்டை - 67

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 52

தஞ்சாவூர் - 69

தேனி - 59

திருப்பத்தூர் - 28

திருவள்ளூர் - 440

திருவண்ணாமலை - 92

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 33

திருநெல்வேலி - 90

திருப்பூர் - 114

திருச்சி - 65

வேலூர் - 33

விழுப்புரம் - 298

விருதுநகர் - 40.
 

click me!