காவலர்களை ரவுண்ட் கட்டும் கொரோனா... தமிழகத்தில் 140க்கும் மேற்பட்ட போலீசார் பாதிப்பு..?

By vinoth kumarFirst Published May 11, 2020, 5:57 PM IST
Highlights

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக காவல்துறையினர் முழுமையாக களமிறங்கபட்டுள்ளனர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், சந்தைகள், வாகன சோதனை நடக்கும் செக் போஸ்ட்கள் போன்ற ரிஸ்க் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் நெருக்கடியால் போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வேலை பார்க்கும் இரண்டு பெண் உதவி ஆய்வாளர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டில் மொத்தம் 140க்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கொரோனா தடுப்பு பணிகளில் தமிழக காவல்துறையினர் முழுமையாக களமிறங்கபட்டுள்ளனர். நோய் கட்டுப்பாட்டு பகுதிகள், சந்தைகள், வாகன சோதனை நடக்கும் செக் போஸ்ட்கள் போன்ற ரிஸ்க் நிறைந்த பகுதிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் பணியாற்ற வேண்டிய சூழல் நெருக்கடியால் போலீசாருக்கும் கொரோனா தொற்று பரவிக் கொண்டிருக்கிறது.

மாநில அளவில் பாதிப்பு அதிகமாக உள்ள சென்னையில் பணியாற்றும் போலீசாரு கொரோனா தொற்று அதிகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன்தினம் வரை உதவி ஆணையர், துணை ஆணையர், காவல் ஆய்வாளர்கள், எஸ்ஐக்கள், கான்ஸ்டபிள்கள் என மொத்தம் 60 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்தது. நேற்று மாதவரம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் 4 போலீசார், ஆவடி பட்டாலியனில் பணியாற்றும் 8 போலீசார் என 12  பேருக்கு உறுதியாகியுள்ளது. 

இன்றுஒரே நாளில் 5 காவல் ஆய்வாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மத்திய குற்றப்பிரிவு ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, சாத்தான்காடு, எண்ணூர், மணலிபுதூர், முத்தியால் பேட்டை காவல் ஆய்வாளர்களுக்கும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையை சேர்ந்த 4 காவலர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  இந்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 140க்கும் மேற்பட்ட காவலர்கள் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதாக டிஜிபி அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

click me!