செம குட் நியூஸ்.. 17 மாவட்டத்தில் ஒரு தொற்று கூட இல்லை.. மாவட்ட வாரியாக முழு விவரம்

By karthikeyan VFirst Published May 10, 2020, 7:34 PM IST
Highlights

தமிழ்நாட்டில் இன்று 17 மாவட்டங்களில் ஒரு கொரோனா தொற்று கூட இல்லை.
 

தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு மேலாக தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. இன்று 669 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதில் 509 பேர்  சென்னையை சேர்ந்தவர்கள். எனவே சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 3839ஆகவும் தமிழ்நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 7204ஆகவும் அதிகரித்துள்ளது. 

கொரோனா இல்லாத மாவட்டமாக நீண்ட நாட்களாக நீடித்த கிருஷ்ணகிரியில் கடைசியாக பாதிப்பு உறுதியான நிலையில், இன்று 10 பேருக்கு கொரோனா உறுதியானதால் அங்கு பாதிப்பு 20ஆக அதிகரித்தது. இன்று சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் முறையே 47 மற்றும் 43 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமாக இருந்த கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக ஒரு பாதிப்பு கூட உறுதியாகவில்லை. இந்த 3 மாவட்டங்களும் கொரோனாவிலிருந்து மீண்டுவிட்டன. 

இன்று, தர்மபுரி, திண்டுக்கல், கோவை, ஈரோடு, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூர், சேலம், சிவகங்கை, தென்காசி, திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி ஆகிய 17 மாவட்டங்களிலும் இன்று ஒரு தொற்று கூட உறுதியாகவில்லை. 

மாவட்ட வாரியாக பாதிப்பு விவரம்:

அரியலூர் - 275

செங்கல்பட்டு - 267

சென்னை - 3839

கோவை - 146

கடலூர் - 395

தர்மபுரி - 4

திண்டுக்கல் - 108

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 59

காஞ்சிபுரம் - 122

கன்னியாகுமரி - 25

கரூர் - 48

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 117

நாகப்பட்டினம் - 45

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 104

புதுக்கோட்டை - 6

ராமநாதபுரம் - 26

ராணிப்பேட்டை - 66

சேலம் - 35

சிவகங்கை - 12

தென்காசி - 52

தஞ்சாவூர் - 66

தேனி - 59

திருப்பத்தூர் - 28

திருவள்ளூர் - 337

திருவண்ணாமலை - 82

திருவாரூர் - 32

தூத்துக்குடி - 30

திருநெல்வேலி - 90

திருப்பூர் - 114

திருச்சி - 65

வேலூர் - 32

விழுப்புரம் - 299

விருதுநகர் - 39. 
 

click me!